No results found

    கள்ளக்குறிச்சி அருகே இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க கோரி சாலைமறியல்


    கள்ளக்குறிச்சி - சின்னசேலம் இடையே 2 கி.மீ. தொலைவுக்கு ரெயில்வே பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஏமப்பேர் விவசாயிகளிடம் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இதற்கு இது நாள் வரை பணம் தரவில்லை. இருந்தபோதும் ரெயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடந்தது வந்தது. இங்குள்ள இடங்களின் சந்தை மதிப்பு மற்றும் அரசின் மதிப்பு உயர்ந்தது. எனவே, உயர்த்தப்பட்ட மதிப்பிற்கு ஏற்ற வகையில் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ஏமப்பேரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி - சேலம் ரவுண்டானவில் திரண்டனர். சந்தை மதிப்பிற்கு ஏற்ற வகையில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், உதவி போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனையேற்ற ஏமப்பேர் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Previous Next

    نموذج الاتصال